வண்டலூர் உயிரியல் பூங்கா பார்வையாளர்களுக்காக மீண்டும் திறப்பு

பறவை காய்ச்சல் முன்னெச்சரிக்கை பரிசோதனைகள் நிறைவடைந்ததை தொடர்ந்து, வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவில் உள்ள நீர்வாழ் பறவைகள் தங்கும் கூண்டுகள் பார்வையாளர்களுக்காக மீண்டும் திறக்கப்பட்டுள்ளன. பூங்காவில் பறவைகளுக்கு நடத்தப்பட்ட ஆய்வக பரிசோதனை முடிவுகளில், எவ்வித பறவை காய்ச்சல் பாதிப்பும் இல்லை என்பது உறுதியாகியுள்ளது. மேலும், பூங்காவில் உள்ள அனைத்து பறவைகளும் நலமாக இருப்பதாகவும், பொதுமக்கள் வழக்கம் போல் பார்வையிடலாம் என்றும் பூங்கா நிர்வாகம் தெரிவித்துள்ளது.

தொடர்புடைய செய்தி

✕
✕