வானதி சீனிவாசன் கோவை வடக்கு தொகுதியில் போட்டியிட வாய்ப்பு

கோவை தெற்கு தொகுதி எம்எல்ஏ வானதி சீனிவாசன் கோவை வடக்கு தொகுதியில் போட்டியிட வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சிறுபான்மை மக்கள் அதிகம் உள்ள கோவை தெற்கில் இருந்து வடக்கு தொகுதிக்கு வானதி மாற உள்ளதாக கூறப்படுகிறது. கடந்த முறை காங்கிரஸ் கட்சிக்கு கொடுக்கப்பட்ட கோவை தெற்கு தொகுதியில் இந்த முறை திமுகவே போட்டியிட உள்ளதாக கூறப்படுகிறது. கோவை வடக்கு தொகுதியின் தற்போதைய எம்எல்ஏவாக அதிமுகவின் அம்மன் கே. அர்ஜுனன் பதவியில் உள்ளார்.

தொடர்புடைய செய்தி