அப்பளமாக நொறுங்கிய வேன்.. 9 பேர் உடல் நசுங்கி பலி

மத்தியப் பிரதேச மாநிலத்தில் சாலையில் வேகமாக சென்ற மினி வேன் மீது டாரஸ் லாரி மோதியதில் 9 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 2 பேர் மருத்துவமனையில் தீவிர சிகிச்சையில் உள்ளனர். ஜபுவா மாவட்டத்தில், திருமண விழாவில் இருந்து திரும்பிக் கொண்டிருந்தபோது இன்று (ஜூன் 4) அதிகாலை 2.30 மணியளவில் இந்த கோர விபத்து நடந்துள்ளது. ரயில் மேம்பாலத்தை லாரி கடக்கும்போது, கட்டுப்பாட்டை இழந்து வேன் மீது மோதியது விசாரணையில் தெரியவந்துள்ளது.

நன்றி: PTI_News

தொடர்புடைய செய்தி