திருச்சி மாவட்டம் முசிறி அருகே நிகழ்ந்த சாலை விபத்தில் 5 பேர் உயிரிழந்தனர். துறையூர் செல்லும் நெடுஞ்சாலையில் ஜம்புநாதபுரம் பகுதியில் சென்றுகொண்டிருந்த வேன், கட்டுப்பாட்டை இழந்து சாலையோர மரத்தின் மீது மோதியதாகக் கூறப்படுகிறது. இந்த விபத்தில் 5 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாகத் தகவல் வெளியாகியுள்ளது. மேலும், படுகாயமடைந்த 3 பேர் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். விபத்துக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.