வால்பாறை அதிமுக சட்டமன்ற உறுப்பினர் அமுல் கந்தசாமி (60) காலமானார். அமுல் கந்தசாமி உடல்நல குறைவு காரணமாக கோவையில் உள்ள ராமகிருஷ்ணா மருத்துவமனையில் கடந்த 2 மாதங்களாக சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று (ஜூன்.21) பிற்பகலில் அவர் உயிரிழந்தார். 2021 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் சிபிஐ கட்சி வேட்பாளரை 13,171 வாக்குகள் வித்தியாசத்தில் வீழ்த்தி அமுல் கந்தசாமி வெற்றி பெற்றிருந்தார்.