"வள்ளுவர் காற்றைப்போல் பொதுவானவர்.. யாரும் சாயமடிக்க முடியாது"

கவிஞர் வைரமுத்து எழுதியுள்ள ‘வள்ளுவர் மறை - வைரமுத்து உரை' நூல் வருகிற ஜூலை 13-ந்தேதி வெளியிடப்பட உள்ளது. இதுகுறித்து வைரமுத்து தனது X தள பக்கத்தில், "வள்ளுவர் காற்றைப்போல் பொதுவானவர். காற்றில் யாரும் சாயமடிக்க முடியாது. எந்தப் பழைமைவாதமும் காற்றைப் பூட்டிவைக்க இயலாது. வள்ளுவம் உலகப் பொதுமறை என்று உலகத் தமிழர்கள் உரக்கச் சொல்வதற்கு, எனது முன்னுரையே வாளுமாகும். கேடயமுமாகும்" என்று பதிவிட்டுள்ளார்.

தொடர்புடைய செய்தி