உலகத் தாய்மொழி தினத்தை முன்னிட்டு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தனது X தளத்தில் வெளியிட்ட வாழ்த்து பதிவில், திருவள்ளுவர் காவி உடையில் இருக்கும் புகைப்படத்தை பயன்படுத்தியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. வழக்கமான வெள்ளை உடைக்கு மாறாகக் காவி உடை சித்திரம் இடம்பெற்றது அரசியல் வட்டாரத்தில் சலசலப்பை உருவாக்கியுள்ளது. ஏற்கனவே திருவள்ளுவருக்குக் காவி நிறம் பூசுவதற்கு எதிராகக் கடும் எதிர்ப்புகள் நிலவி வரும் நிலையில், இபிஎஸ்-இன் இந்தப் பதிவு விவாதப் பொருளாக மாறியுள்ளது.
நன்றி:NewsTamil