காதலர் தினத்தை முன்னிட்டு ரோஜா பூக்களுக்கான தேவை அதிகரித்துள்ளதால், அதன் விலை சந்தையில் இரண்டு மடங்கு உயர்ந்துள்ளது. முன்னதாக ஒரு கட்டு ரூ.350-க்கு விற்பனையான நிலையில், தற்போது அதன் விலை ரூ.700-ஆக அதிகரித்துள்ளதால் மலர் சாகுபடி செய்துள்ள விவசாயிகள் பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். வெளிமாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி அதிகரித்துள்ளதால், வரும் நாட்களில் விலை மேலும் உயர வாய்ப்புள்ளதாக வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.
நன்றி:News18