காதலர் தினத்தையொட்டி இன்று (பிப்.14) ரோஜா பூக்களின் விலை உயர்ந்துள்ளது. 20 ரோஜா பூக்கள் கொண்ட ஒரு கட்டின் விலை ரூ.250லிருந்து ரூ.450ஆக உயர்ந்துள்ளது. ரோஜா பூக்கள் மட்டுமின்றி கடைகளில் பூங்கொத்து விற்பனையும் அதிகரித்துள்ளது. ஃப்ளிப்கார்ட், அமேசான் போன்ற இணையதளத்தில் பூக்கள், பூங்கொத்துக்கள், சாக்லேட் விற்பனையும் அதிகரித்துள்ளது. மேலும், ஏராளமான பரிசுப்பொருட்களும் இணையத்தில் படுஜோராக விற்பனையாகி வருகிறது.
நன்றி: குமுதம்