ஜனவரி 10-ம் தேதி வைகுண்ட ஏகாதசி பெருவிழாவை முன்னிட்டு பக்தர்களின் வசதிக்காக ஸ்ரீரங்கம் ரயில் நிலையத்தில் 2 எக்ஸ்பிரஸ் ரயில்கள் நின்று செல்லும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. அதன்படி ஜனவரி 9, 10 தேதிகளில் எழும்பூர் - கன்னியாகுமரி, கன்னியாகுமரி - எழும்பூர், எழும்பூர் - கொல்லம், கொல்லம் - எழும்பூர் ஆகிய இரண்டு விரைவு ரயில்கள் ஸ்ரீரங்கத்தில் நின்று செல்லும். ஜனவரி 1 முதல் 21 வரை வைகை எக்ஸ்பிரஸ் ஸ்ரீரங்கத்தில் தற்காலிகமாக நின்று செல்கிறது.