U19 உலகக் கோப்பை இறுதிப்போட்டியில் இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் இன்று (பிப்., 06) விளையாடி வருகின்றன. இதில், இந்திய வீரர் வைபவ் சூர்யவன்ஷி அதிவேக சதம் விளாசி வரலாற்றுச் சாதனை படைத்துள்ளார். இந்தப் போட்டியில் மட்டும் 15 சிக்ஸர்கள், 15 பவுண்டரிகளையும் விளாசினார். இதன்மூலம் U19 உலகக் கோப்பைத் தொடரில் ஒரு இன்னிங்சில் அதிக சிக்ஸர்கள் (15) மற்றும் அதிவேகமாக 150 ரன்கள் எடுத்த வீரர் என்ற உலக சாதனையை படைத்துள்ளார்.