ஐபிஎல் வரலாற்றில் மிகக் குறைந்த பந்துகளில் (440) 1,000 ரன்களைக் கடந்த முதல் வீரர் என்ற சாதனையை வைபவ் சூர்யவன்ஷி படைத்துள்ளார். இதற்கு முன் கொல்கத்தா அணியின் ஆண்ட்ரே ரஸல் 545 பந்துகளில் எடுத்ததே சாதனையாக இருந்தது. மேலும், நடப்பு 2026 ஐபிஎல் சீசனில் சூர்யவன்ஷி 133 பவுண்டரிகள் விளாசி, 2022-ல் ஜோஸ் பட்லர் (128 பவுண்டரிகள்) படைத்திருந்த வரலாற்றுச் சாதனையையும் முறியடித்துள்ளார்.