துணை முதல்வர் உதயநிதியை நேரில் வாழ்த்திய வடிவேலு

தமிழ்நாட்டின் துணை முதல்வராக உதயநிதி ஸ்டாலின் நேற்று முன்தினம் (செப். 29) பொறுப்பேற்றார். அவருடன் 4 புதிய அமைச்சர்களும் பதவியேற்றுக் கொண்டனர். இதனையடுத்து திரையுலகை சேர்ந்த பலரும் உதயநிதி ஸ்டாலினுக்கு வாழ்த்து தெரிவித்தனர். அந்த வகையில் நடிகர் வடிவேலு உதயநிதியை நேரில் சந்தித்து பூங்கொத்து கொடுத்து வாழ்த்தினார். துணை முதல்வர், மதுரைக்கு சென்றுள்ள நிலையில் அவரை வடிவேலு சந்தித்தார்.

நன்றி: மாலைமுரசு

தொடர்புடைய செய்தி