ஈரான் துறைமுகங்களை சூழ்ந்த அமெரிக்கா - அதிகரிக்கும் பதற்றம்

ஈரான் அணு ஆயுதப் போர் பதற்றத்திற்கிடையே, அந்நாட்டுத் துறைமுகங்களை அமெரிக்கா அதிரடியாக முற்றுகையிட்டுள்ளது. 10,000 வீரர்கள், 100-க்கும் மேற்பட்ட விமானங்கள் மற்றும் 12 போர்க்கப்பல்களுடன் அமெரிக்காவின் சென்ட்காம் இதனை அமல்படுத்தியுள்ளது. அனைத்து நாடுகளுக்கும் பொருந்தும் இம்முற்றுகையின் முதல் 24 மணிநேரத்தில் எந்தக் கப்பலும் இதனை மீறவில்லை; 6 வணிகக் கப்பல்கள் திருப்பி அனுப்பப்பட்டுள்ளன. இதனால் இரு நாடுகளுக்கு இடையேயான போர் பதற்றம் உச்சத்தை எட்டியுள்ளது.

தொடர்புடைய செய்தி