ஈரான் மீது அமெரிக்கா அதிரடி தாக்குதல்: போர் பதற்றம் அதிகரிப்பு

அமெரிக்கா-இஸ்ரேல் கூட்டணிக்கு எதிராக ஈரான் ஹர்முஸ் ஜலசந்தியை மூடியதால் கச்சா எண்ணெய் விலை உயர்ந்தது. ஏப்ரல் 7-ல் அமெரிக்கா தற்காலிகமாகத் தாக்குதலை நிறுத்தி நிபந்தனைகளை விதித்த நிலையில், ஈரானும் பதில் நிபந்தனைகளை விதித்தது. இந்நிலையில், இன்று அமெரிக்கா மீண்டும் ஈரானின் பண்டர் அபாஸ் நகரில் வான்வழித் தாக்குதல் நடத்தியுள்ளது. ஏவுகணை ஏவுதளங்கள், கடற்படைப் படகுகள் குறிவைக்கப்பட்ட இத்தாக்குதலால் மத்திய கிழக்கில் மீண்டும் போர் பதற்றம் அதிகரித்துள்ளது.

தொடர்புடைய செய்தி