தென்னாப்பிரிக்காவில் நடைபெறவுள்ள ஜி20 உச்சி மாநாட்டில் அமெரிக்க அதிகாரிகள் பங்கேற்க மாட்டார்கள் என அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். இது குறித்து கருத்து தெரிவித்துள்ள அவர், "தென்னாப்பிரிக்காவில் ஆப்பிரிக்க மக்கள் படுகொலை செய்யப்படுகின்றனர். இந்த மனித உரிமை மீறல்கள் தொடரும் வரை எந்தவொரு அமெரிக்க அதிகாரிகளும் மாநாட்டில் பங்கேற்கமாட்டார்கள்" என்று கூறியுள்ளார். மேலும், 2026-ம் ஆண்டு ஜி20 உச்சி மாநாட்டை அமெரிக்காவில் நடத்த திட்டமிட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.