அமெரிக்கா-ஈரான் இடையிலான பதற்றத்தை தணிக்க, இருநாட்டு பிரதிநிதிகளும் வரும் ஏப்ரல் 10-ம் தேதி பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் நேரில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்த உள்ளனர். ஈரான் சபாநாயகர் முகமது காலிபாஃப் மற்றும் அமெரிக்க துணை அதிபர் ஜே.டி.வான்ஸ் தலைமையிலான குழுக்கள், ஏற்கனவே அமலில் உள்ள இருவார கால போர்நிறுத்த ஒப்பந்தத்தை அடுத்து அடுத்தகட்ட அமைதி நடவடிக்கைகள் குறித்து ஆலோசிக்கவுள்ளனர்.