அமெரிக்காவில் முதலீடு செய்யும் வெளிநாட்டினருக்கான EB-5 விசா கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. தனிநபர் முதலீட்டாளர்கள் பயன்படுத்தும் I-526 படிவத்துக்கான மனுதாக்கல் கட்டணம் ரூ.3,52,435-ல் இருந்து ரூ.7,30,284 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் விசா கட்டணம் இரு மடங்குக்கும் அதிகமாக உயர்ந்துள்ளது. அமெரிக்காவில் முதலீடு செய்து நிரந்தர குடியிருப்பு பெற விரும்பும் வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கு இந்தக் கட்டண உயர்வு கூடுதல் செலவை ஏற்படுத்தியுள்ளது.