ஹோர்முஸ் ஜலசந்தியை முற்றுகையிட்டுள்ள அமெரிக்க கடற்படை, எச்சரிக்கையை மீறி பந்தர் அப்பாஸ் துறைமுகத்திற்குச் செல்ல முயன்ற ‘டவுஸ்கா’ என்ற ஈரானிய சரக்குக் கப்பலைப் பறிமுதல் செய்தது. இதற்கு ஈரான் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இது சர்வதேச சட்டங்களை மீறிய கடற்கொள்ளை எனத் தெரிவித்துள்ள ஈரான், பிணைக்கைதிகளாக்கப்பட்டுள்ள கப்பல் ஊழியர்களை உடனடியாக விடுவிக்க ஐ.நா. மற்றும் சர்வதேச அமைப்புகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளது.