ஈரானின் ரகசிய எண்ணெய் வர்த்தகத்திற்கு உதவி செய்ததாக கூறி இந்தியாவை சேர்ந்த நிறுவனங்கள் மற்றும் தனிநபர்கள் மீது அமெரிக்கா பொருளாதார தடைகளை விதித்து நடவடிக்கை எடுத்துள்ளது. ஓசியானிக் டெக்னாலஜிஸ் மற்றும் ஆரியாவர்த் ஷிப் மேனேஜ்மென்ட் உள்ளிட்ட 9 நிறுவனங்கள் மற்றும் 4 தனிநபர்கள் இந்த தட பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளனர். ஈரானிய எண்ணெய் ஏற்றுமதிக்கு சர்வதேச அளவில் நிதியுதவி மற்றும் கப்பல் போக்குவரத்து ஆதரவு அளித்ததற்காகவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அமெரிக்க நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது.