வளைகுடா பகுதியில் இருந்த அமெரிக்காவின் அதிநவீன AN/FPS-132 ரேடார் அமைப்பை தாக்கி அழித்துவிட்டதாக ஈரானின் புரட்சிகர காவல்படை (IRGC) அறிவித்துள்ளது. சுமார் 1.1 பில்லியன் டாலர் மதிப்பிலான இந்த ரேடார் சிதைக்கப்பட்டதால், அமெரிக்காவின் வான் பாதுகாப்பு மற்றும் ஏவுகணை கண்காணிப்பு திறன் பெரும் பாதிப்புக்குள்ளாகியுள்ளது. இந்த தாக்குதல் வளைகுடா பிராந்தியத்தில் போர் பதற்றத்தை உச்சக்கட்டத்திற்கு தள்ளியுள்ளது.