நைஜீரியா நாட்டில் அமெரிக்க ராணுவம் நடத்திய தாக்குதலில் ஐஎஸ்ஐஎஸ் மூத்த தலைவர் அபு பிலால் (44) கொல்லப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. மேற்கு ஆப்பிரிக்க நாடான நைஜீரியாவில் ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத அமைப்பு ஆழமாக கால் ஊன்றி நாச வேலைகளில் ஈடுபட்டு வருகிறது. அமெரிக்க ராணுவம் மற்றும் நைஜீரிய ராணுவம் இணைந்து அந்த தீவை நேற்று முன்தினம் இரவு சுற்றிவளைத்து தாக்குதலை நடத்தின. இதில் ஐஎஸ்ஐஎஸ் மூத்த தலைவர் அபு பிலால் கொல்லப்பட்டதாக தெரிகிறது.