பீகாரில் 6 மாவட்டங்களை சேர்ந்த 40 தாய்மார்களின் தாய்ப்பாலில் யுரேனியம் கதிர்வீச்சு பொருள் இருப்பது சோதனையில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. நிலத்தடி நீர் கடுமையாக மாசடைந்ததன் காரணமாகவே இந்த யுரேனியம் கலப்பு இருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது. இந்த தாய்ப்பாலை குழந்தைகள் அருந்தினால் அவர்களுக்கு புற்றுநோய் மற்றும் நரம்பியல் கோளாறுகள் ஏற்பட வாய்ப்புள்ளதாக AIIMS மருத்துவர் அசோக் சர்மா எச்சரிக்கை விடுத்துள்ளார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.