யுபிஎஸ்சி பிரதானத் தேர்வு: தமிழ்நாட்டில் தேர்ச்சி விகிதம் அதிகரிப்பு

மத்திய அரசு பணியாளர் தேர்வாணையமான யு.பி.எஸ்.சி. நடத்திய 2025-ம் ஆண்டு பிரதான தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளன. இதில் தமிழ்நாட்டில் இருந்து தேர்ச்சி பெற்றவர்களின் எண்ணிக்கை கடந்த ஆண்டை விட அதிகரித்துள்ளது. கடந்த ஆண்டு 136 பேர் தேர்ச்சி பெற்ற நிலையில், இந்த ஆண்டு 155 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். தமிழ்நாடு மாணவர்களின் தேர்ச்சி விகிதம் 13.97% உயர்ந்துள்ளது. இந்த ஆண்டு தேர்ச்சி பெற்றவர்களில் 54.84% பேர் மாநில அரசின் பயிற்சி மையத்தில் பயின்றவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்தி