மேலடுக்கு சுழற்சி.. தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்பு

தென் கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளி மண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்யக்கூடும். அந்த வகையில் இன்று (ஏப்ரல் 7) தமிழ்நாட்டின் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னை உள்பட மற்ற மாவட்டங்களில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் எனவும் தெரிவித்துள்ளது.

தொடர்புடைய செய்தி