அக்டோபர் 15 முதல் பெட்ரோல் பங்குகளில் ரூ.2,000க்கு மேல் UPI மூலம் பணம் செலுத்துவதை நிறுத்தக்கூடும் என பெட்ரோல் பங்க் டீலர்கள் எச்சரித்துள்ளனர். ரூ.2,000க்கு மேற்பட்ட சில UPI வணிகப் பரிவர்த்தனைகளுக்கு 0.4% MDR அமல்படுத்தப்பட உள்ள நிலையில், எரிபொருள் விற்பனையாளர்களுக்கு முழு விலக்கு அளிக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ANI தகவலின்படி, அகில இந்திய பெட்ரோலிய விற்பனையாளர்கள் சங்கமும் பெட்ரோல் பங்குகளில் UPI பணப்பரிவர்த்தனைகளுக்கான MDR-ல் இருந்து முழுமையான விலக்கு கோரியுள்ளது.