உத்தரப்பிரதேச சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு, சமாஜ்வாதி கட்சியிடம் சுமார் 125 தொகுதிகளைப் பெற்றுப் போட்டியிட காங்கிரஸ் கட்சி திட்டமிட்டுப் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. இதனிடையே, மாநிலத்தில் காங்கிரஸ் கட்சிக்கு வெற்றி வாய்ப்புள்ளதாகக் கருதப்படும் 175 தொகுதிகள் குறித்து, கட்சியின் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி மூத்த தலைவர்களுடன் 3 மணி நேரத்திற்கும் மேலாக தீவிர ஆலோசனை நடத்தியுள்ளார். இதில் தொகுதி நிலவரம் மற்றும் தேர்தல் வியூகங்கள் விவாதிக்கப்பட்டுள்ளன.