திருப்பூர்: குன்னத்தூர் பகுதியில் உள்ள பெருமாநல்லூர் சாலையில் அரசு பள்ளி மாணவர்களை சிலர் போதையில் அரிவாளால் வெட்ட துரத்திய காணொளி இணையத்தில் வைரலானது. இது குறித்து பாஜக பொதுக்குழு உறுப்பினர் அண்ணாமலை இன்று (ஜூலை 17) தனது X தளத்தில், "போதைப் பொருட்களால் தமிழ்நாடே சீரழிந்திருக்கும் நிலையில், தற்போது மாணவர்களுக்கும் பாதுகாப்பில்லாத சூழல் ஏற்பட்டிருப்பது வெட்கக்கேடானது" என பதிவிட்டுள்ளார்.