டெல்லியில் நடைபெற்று வரும் AI உச்சி மாநாட்டில், நொய்டாவைச் சேர்ந்த கால்கோஷியா பல்கலை., ரோபோ நாய் ஒன்றை காட்சிப்படுத்தியது. அந்த ரோபோவின் பெயர் `ஓரியான்’ என்றும் அது தங்கள் தயாரிப்பு என்றும் பல்கலை., அளித்த விளக்கம் வைரலானது. இதனையடுத்து, ரோபோவின் டிசைனை ஆராய்ந்த நெட்டிசன்கள், அது சீன தயாரிப்பு ரோபோ என ஆதாரங்களோடு கலாய்த்து வருகின்றனர். இதனால், உச்சி மாநாட்டில் இருந்து அந்தப் பல்கலைக்கழகம் வெளியேற்றப்படுவதாக தகவல் வெளியானது. இந்த தகவலுக்கு பல்கலை., மறுத்துள்ளது.