அமைப்புசாரா துறையினர் உட்பட அனைத்து இந்திய குடிமக்களும் அணுகக்கூடிய புதிய உலகளாவிய ஓய்வூதியத் திட்டத்தை மத்திய அரசு செயல்படுத்தி வருவதாகக் கூறப்படுகிறது. இது பல்வேறு பணிகளில் ஈடுபட்டுள்ள தனிநபர்களுக்கு நிதிப் பாதுகாப்பை உறுதி செய்யும். அதே வேளையில் தற்போதுள்ள ஓய்வூதிய கட்டமைப்பை நெறிப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி (EPF) போன்ற அரசாங்க ஆதரவு ஓய்வூதியத் திட்டங்களைப் போல் இன்றி, இந்த புதிய ஓய்வூதியத் திட்டம் தன்னார்வ மற்றும் பங்களிப்பு அடிப்படையில் செயல்படும்.