அமெரிக்காவின் நியூயார்க் நகரில் மட்டும் மன்ஹாட்டன்ட் என்ற எறும்பு இனம் இருக்கிறது. இந்த எறும்புகள் லேசியஸ் எமார்கினேட்ஸ் என வகைப்படுத்தப்பட்டுள்ளது. கடந்த 2011ம் ஆண்டு நியூயார்க் நகரில் மட்டும் கண்டறியப்பட்ட புதுவகை எறும்பு நகர சூழலுக்கு ஏற்ப தேன் பனியை சாப்பிட்டு வாழுகின்றன. இவை பிற எறும்பு உட்பட சிறு பூச்சி இனங்களை அச்சுறுத்தி தன்னை படைபலம் மிக்க எறும்பாக காண்பித்துக்கொள்கிறது. நியூயார்க் நகருக்கு இந்த வகை எறும்பு ஐரோப்பாவில் இருந்து வந்திருக்கலாம் எனவும் நம்பப்படுகிறது.