தெலங்கானாவில் பரபரப்பை ஏற்படுத்திய போக்சோ வழக்கில், மத்திய இணை அமைச்சர் பண்டி சஞ்சய்குமாரின் மகன் பகீரத் கைது செய்யப்பட்டுள்ளார். 17 வயது சிறுமியை பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக குற்றச்சாட்டு எழுந்ததைத் தொடர்ந்து போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுத்தனர். விசாரணையின் அடிப்படையில் பகீரத் கைது செய்யப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த சம்பவம் தெலுங்கானா அரசியல் மற்றும் சமூக வட்டாரங்களில் பெரும் அதிர்வலை ஏற்படுத்தியுள்ளது.