டெல்லியில் இன்று (மே 21) மாலை 4.30 மணிக்கு பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை கூட்டம் நடைபெறுகிறது. சர்வதேச நாடுகளுக்கான சுற்றுப்பயணத்தை முடித்து திரும்பியதும் நடக்கும் இந்த கூட்டத்தில், மத்திய அமைச்சர்கள் பங்கேற்கின்றனர். மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் போர் பதற்றம் மற்றும் அதனால் இந்தியாவில் ஏற்படும் பொருளாதார தாக்கம் குறித்து விரிவாக விவாதிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. அனைத்து மத்திய அமைச்சர்களும் டெல்லியிலேயே தங்கியிருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.