தென்மேற்கு பருவமழை காலத்தில் தடையற்ற மின்சாரம் வழங்க தமிழ்நாடு மின்துறை நடவடிக்கை எடுத்துள்ளது. வரும் ஜூன் முதல் வாரத்தில் இருந்து பருவமழை தொடங்குகிறது. இதனால் கேரளாவை ஒட்டியுள்ள மேற்குத்தொடர்ச்சி மலையோர மாவட்டங்களில் கனமழை அதிகரிக்கும் என கூறப்படுகிறது. இந்த சூழலில் கூடுதல் ஒப்பந்த பணியாளர்களை 45 நாட்களுக்கு (ஜூலை 15) வரை பணியமர்த்த மின்துறை ஒப்புதல் அளித்துள்ளது. மேலும், மின்வாரிய அதிகாரிகள், பணியாளர்களின் உறவினர்களை ஒப்பந்த அடிப்படையில் அமர்த்தக்கூடாது என சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.
நன்றி: News18