தவெக நிர்வாகி ஆதவ் அர்ஜுனா அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை ஒருமையில் விமர்சித்த வீடியோ வெளியாகி சர்ச்சையாகி இருந்தது. இதுகுறித்து விளக்கமளித்துள்ள ஆதவ் அர்ஜுனா, "அந்த வார்த்தைகள் என் இயல்பை மீறியது என்பதை நான் ஒப்புக்கொள்கிறேன். அதற்காக, உண்மையாகவும், நேர்மையாகவும் வருத்தம் தெரிவித்துக்கொள்கிறேன். எந்தவித தனிநபர் தாக்குதலையும், முரண்பாடுகளையும் எப்போதும் எனது பொதுவாழ்வில் நான் கடைப்பிடித்தது கிடையாது" என்றார்.