சென்னையிலிருந்து சொந்த ஊர் செல்ல கிளாம்பாக்கம், பூந்தமல்லி மற்றும் காஞ்சிபுரம் பேருந்து நிலையங்களில் மக்கள் அதிகளவில் குவிந்தனர். போதிய பேருந்துகள் இல்லாததால், கிளாம்பாக்கத்தில் நள்ளிரவில் பயணிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். காலை 8 மணி ஆகியும் குறைவான பேருந்துகளே இயக்கப்படுவதால் ஆத்திரமடைந்த மக்கள், பூந்தமல்லியிலும் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதிகளில் பெரும் பதற்றம் நிலவுகிறது.
நன்றி: பாலிமர்