மேற்கு வங்கத்தின் நந்திகிராம் தொகுதியில் சரியான அடையாள ஆவணங்கள் இருந்தும், சிறுபான்மையினர் நீக்கம் (SIR) நடவடிக்கை மூலம் முஸ்லிம் வாக்காளர்கள் அதிகளவில் நீக்கப்பட்டதாக கூறி, ஐநா சபை இந்திய அரசிடம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இந்த நடவடிக்கையில் நீக்கப்பட்டவர்களில் 95% பேர் முஸ்லிம்கள் என ஐநா சபை தனது அறிக்கையில் குற்றம் சாட்டியுள்ளது. ஆனால், ஐநா சபையின் இந்த குற்றச்சாட்டுகள் முற்றிலும் ஆதாரமற்றவை என்று கூறி இந்திய தேர்தல் ஆணையம் அதனை மறுத்துள்ளது.