ரூ.5,000-ஆக உயர்ந்த உலமாக்கள் உதவித்தொகை - அமைச்சர் அறிவிப்பு

தமிழக சட்டப்பேரவையில் இன்று (பிப்.17) தாக்கல் செய்யப்பட்ட 2026-27 நிதியாண்டிற்கான இடைக்கால பட்ஜெட்டில், சிறுபான்மையினர் நலனுக்காக முக்கிய அறிவிப்புகளை நிதியமைச்சர் தங்கம் தென்னரசு வெளியிட்டார். உலமாக்களுக்கு வழங்கப்பட்டு வந்த மாதாந்திர உதவித்தொகை ரூ.3,000-லிருந்து ரூ.5,000-ஆக உயர்த்தப்படுவதாக அவர் அறிவித்துள்ளார். மேலும், கடந்த 5 ஆண்டுகளில் 90,733 சிறுபான்மையின மாணவர்கள் கல்வி உதவித்தொகை பெற்று பயனடைந்துள்ளதையும் அவர் சுட்டிக்காட்டினார்.

தொடர்புடைய செய்தி