உக்ரைன் - ரஷ்யா போர் 1544வது நாளாக நீடித்து வரும் நிலையில், உக்ரைன் நேற்று இரவு ரஷ்யா மீது டிரோன் தாக்குதல் நடத்தியது. தலைநகர் மாஸ்கோ, ஹிம்கி உள்ளிட்ட நகரங்களை குறிவைத்து 500க்கும் மேற்பட்ட டிரோன்கள் ஏவப்பட்டன. இந்த தாக்குதலில் 3 பேர் உயிரிழந்தனர், 12 பேர் காயமடைந்தனர். கடந்த 30 நாட்களில், இது ரஷ்யா மீது உக்ரைன் நடத்திய மிகப்பெரிய டிரோன் தாக்குதல் இது என கூறப்படுகிறது.