லண்டன்: காசா போர்நிறுத்த ஒப்பந்தத்தைத் தொடர்ந்து, ஹமாஸ் பிடியில் இருந்த பணயக்கைதிகள் விடுதலை செய்யப்பட்டனர். இது குறித்து இங்கிலாந்து பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் வெளியிட்டுள்ள அறிக்கையில், இஸ்ரேல் பணயக்கைதிகள் விடுதலை செய்யப்பட்டது ஆழ்ந்த நிம்மதி அளிப்பதாகவும், இஸ்ரேல் என்ஜினீயர் ஏவிநேடன் ஹமாஸ் பிடியில் சித்ரவதை செய்யப்பட்டது நினைவில் நிற்பதாகவும், அவரது குடும்பத்தினர் அனுபவித்த வேதனையை யாராலும் புரிந்து கொள்ள முடியாது என்றும் கூறினார்.