இன்றைய (டிச. 09) சட்டமன்ற கூட்டத்தொடரில் டங்ஸ்டன் சுரங்கத்திற்கு எதிரான தீர்மானத்தின் மீது அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி உரையாற்றினார். "பல விஷயங்களில் முன்கூட்டியே அரசு நடவடிக்கை எடுத்திருந்தால் இவ்வளவு பிரச்னை ஏற்பட்டிருக்காது, மக்களும் போராடியிருக்க தேவை இருந்திருக்காது. விஷயம் இல்லாமல் 'ஆ ஊ என அமைச்சர் துரைமுருகன் கத்தி பேசக்கூடாது. சட்டமன்றம்தானே இது, இந்த வேலையெல்லாம் என்னிடம் நடக்காது" என்றார்.