மேகதாது அணை திட்டத்திற்கு எதிராக டெல்லியில் போராட்டம் நடத்த சென்ற வழியில், நாக்பூரில் கைது செய்யப்பட்ட தமிழக விவசாயிகளை விடுவிக்க CM விஜய் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். விவசாயிகள் டெல்லி சென்று ஜனநாயக வழியில் தங்களது போராட்டத்தை முன்னெடுக்க மத்திய அரசு அனுமதிக்க வேண்டும் என்றும் அவர் கேட்டு கொண்டுள்ளார். மேலும், தமிழக விவசாயிகளின் உரிமைகளை பாதுகாக்க அரசு விரைந்து செயல்பட வேண்டும் என அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
நன்றி:PT