நடிகர் அஜித் குமாரின் தாயார் மோகினி மணி (85) வயது முதிர்வு மற்றும் உடல்நலக்குறைவு காரணமாக சென்னையில் இன்று (மே 30) காலமானார். இதற்கு இரங்கல் தெரிவித்து உதயநிதி ஸ்டாலின் பதிவு வெளியிட்டுள்ளார். அதில், “நடிகரும் நண்பருமான அஜித்குமாருடைய அன்பு தாயார் மறைந்த செய்திக் கேட்டு வருத்தமுற்றேன். அஜித் வாழ்வில் பல்வேறு உயரங்களைத் தொட உறுதுணையாக இருந்தவர் அவருடைய தாயார். அவரை இழந்து வாடும் நண்பர் அஜித்துக்கு எனது ஆறுதலை தெரிவித்துக் கொள்கிறேன்” என குறிப்பிட்டுள்ளார்.