உதயநிதி வெற்றியிலும் கூட்டணி வாக்குகள் உள்ளன - காங்கிரஸ் எம்.பி. கிறிஸ்டோபர்

உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்ட திமுகவினரின் வெற்றியில் கூட்டணி கட்சிகளின் வாக்குகள் முக்கிய பங்கு வகித்துள்ளதாக காங்கிரஸ் எம்.பி.கிறிஸ்டோபர் திலக் தெரிவித்துள்ளார். திருச்சி விமான நிலையத்தில் இன்று (மே 7) பேட்டியளித்த அவர், "தேர்தல் நேரத்தில் தலைவர்கள் பேசிய 'பஞ்ச்' வசனங்களை இப்போது ஆராய வேண்டிய அவசியமில்லை. தற்போதைய சூழலில் தமிழகத்தின் நலன் கருதி எடுக்கப்படும் முடிவுகளை விமர்சிப்பதை கைவிட்டு, எதார்த்த அரசியலை அனைவரும் புரிந்துகொள்ள வேண்டும்" என வலியுறுத்தினார்.

நன்றி:NewsTamil

தொடர்புடைய செய்தி