தவெக ஆட்சையை கவிழ்க்க திமுக, அதிமுக சதி: அமைச்சர் நிர்மல்குமார்

தவெக ஆட்சியை கவிழ்ப்பதற்காக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மற்றும் உதயநிதி ஆகியோர் தவெக MLA-களிடம் பேரம் பேசும் முயற்சியை முடுக்கி விட்டுள்ளதாக அமைச்சர் நிர்மல்குமார் குற்றம் சாட்டியுள்ளார். மதுரையில் இன்று பேட்டியளித்த அவர், பாஜக உதவியுடன் திமுக மற்றும் அதிமுக இணைந்து ஆட்சி அமைக்க தீவிர முயற்சி செய்து வருவதாகவும், என்ன செய்தாலும் தவெக MLA-க்கள் விலைபோக மாட்டார்கள் என்றும் அவர் உறுதியாக தெரிவித்துள்ளார். மேலும், இதையெல்லாம் தாண்டி தவெக ஆட்சி சிறப்பாக நடைபெறும் என்று அவர் கூறியுள்ளார்.

நன்றி:பாலிமர்

தொடர்புடைய செய்தி

✕
✕