Uber, Ola, Rapido உள்ளிட்ட தளங்களின் ஓட்டுநர்கள், நாளை (பிப்.7) நாடு தழுவிய வேலைநிறுத்தத்தில் ஈடுபடவுள்ளனர். 2025ஆம் ஆண்டே மோட்டார் வாகன வழிகாட்டுதல்கள் அமலுக்கு வந்திருந்தாலும், தளங்கள் தன்னிச்சையாக கட்டணங்களை நிர்ணயிப்பதாக தொழிற்சங்கங்கள் குற்றம்சாட்டுகின்றன. நிலையற்ற ஊதியம் மற்றும் விதிமுறைகளை அமல்படுத்துவதில் உள்ள குறைபாடுகளை எதிர்த்து இந்த வேலைநிறுத்தத்தை அறிவித்துள்ளனர். மேலும் நாளைய தினம் பொதுமக்கள் பேருந்து, ரயில் போன்றவற்றை பயன்படுத்த வேண்டுகோள் விடுத்துள்ளனர்.