ஸ்பெயினில் இரண்டு அதிவேக ரயில்கள் மோதி விபத்துக்குள்ளாகின. டோலிடோ மாகாணத்தில் நிறுத்தப்பட்டிருந்த தனியார் ரயில் மீது அரசுக்குச் சொந்தமான ரயில் மோதியதில் 64-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். 500-க்கும் மேற்பட்ட பயணிகள் இருந்த நிலையில், படுகாயமடைந்த பலர் சிகிச்சையில் உள்ளதால் பலி எண்ணிக்கை மேலும் உயரும் என அஞ்சப்படுகிறது. விபத்துக்கு ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ள ஸ்பெயின் பிரதமர் பெட்ரோ சான்செஸ், தனது அனைத்து தேர்தல் பிரச்சார நிகழ்வுகளையும் உடனடியாக ரத்து செய்துள்ளார்.