தமிழக அரசின் எச்சரிக்கையையும் மீறி, மயிலாடுதுறை கூறைநாடு டாஸ்மாக் கடையில் பாட்டிலுக்கு கூடுதலாக ரூ.10 வசூலித்த புகாரில், மேற்பார்வையாளர், விற்பனையாளரை போலீசார் கைது செய்தனர். இதை தொடர்ந்து, அந்த கடை தற்காலிகமாக மூடப்பட்டது. நிர்ணயித்த விலையை விட கூடுதலாக பணம் வசூலித்தால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என ஏற்கனவே அரசு எச்சரிக்கை விடுத்திருந்தது. இந்த நிலையில், கூறைநாடு டாஸ்மாக்கில் மதுபானம் வாங்கச் சென்ற செல்வேந்திரன் என்பவர், கூடுதல் பணம் கேட்டு கட்டாயப்படுத்தியதாக போலீசில் புகார் அளித்திருந்தார்.