திமுக கொடிக்கம்பம் அமைத்தபோது மின்சாரம் தாக்கி 2 பேர் பலி

தஞ்சை அருகே ஒரு திருமண மண்டபத்தில் திமுக நிர்வாகி இல்ல திருமணம் நடைபெற உள்ளது. இதில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பங்கேற்கவுள்ளார். இந்நிலையில் கட்சி கொடி அமைக்கும் பணியில் ஈடுபட்டிருந்த தொழிலாளர்கள் கார்த்திக் (45), கோகுல் (29) மீது மின்சாரம் தாக்கியது. இதையடுத்து இருவரும் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தனர். போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி