மினிவேன் மோதி விபத்து.. 2 கூலித்தொழிலாளர்கள் பலி

கள்ளக்குறிச்சி மாவட்டம் சித்தலூர் கிராமத்தைச் சேர்ந்த கூலித்தொழிலாளர்கள் ராவுத்தர் மற்றும் அன்பரசன் ஆகியோர் தியாகதுருகம் வாரச்சந்தைக்கு சென்று காய்கறிகள் வாங்கிவிட்டு, இருசக்கர வாகனத்தில் வீடு திரும்பினர். பானையங்கால் அருகே சென்றபோது, சாலையில் வந்த மினிவேன் எதிர்பாராதவிதமாக இருசக்கர வாகனம் மீது மோதியது. இதில் இருவரும் தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். தகவலறிந்து வந்த போலீசார், உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பினர்.

தொடர்புடைய செய்தி

✕
✕